பொதுவாக வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான தானியம் ஆகும்.
புரோட்டின், கொழுப்பு மற்றும் பல்வேறு பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் நிறைந்துள்ளன.
வேர்க்கடலையை வேக வைத்தோ, வறுத்தோ அல்லது மசாலா சேர்த்துப் பொரித்தோ, உணவுகளோடு சேர்த்தோ சாப்பிடலாம்.
நார்சத்துக்களையும் புரதத்தையும்
கொண்டுள்ள வேர்க்கடலைகள், உடலுக்கு அதிக சக்தியைத் தருவதுடன் உடல் எடையை சீராகப் பேணுவதற்கும் உதவுகிறது.
தினமும் வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் உங்களுடைய Cholesterol இன் அளவு குறைந்து இதயம் பலமாகும். Coronary Artery நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது.
வேர்க்கடலையில் போதுமான அளவு விட்டமின் சி இருப்பதால் இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. கொலாஜன் என்பது சருமத்தின் உறுதித் தன்மையைப் பராமரித்து சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
வேர்க்கடலையில் ஒலிவ் எண்ணெயில் காணப்படக்கூடிய ஓலிக் எனப்படும் ஒருவித அமிலமும் காணப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து அவற்றைப் பாதுகாப்பாகவும், வலிமையுடனும் மாற்ற உதவுகிறது.
வேர்க்கடலையில் Beta-Sitosterol அதிகம் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதோடு, புற்றுநோயின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது.