கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் "Thug Life’. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜோர்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இசைப்புயல் A .R . ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் Audio வெளியீட்டு விழா, இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் இந்திய மதிப்பில் 60 கோடிக்கும், OTT உரிமையை Netfilix நிறுவனம் இந்திய மதிப்பில் 150 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.