தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லோரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.'Remo' திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற திரைப்படங்களைப் போல 'பென்ஸ்' திரைப்படமும் இருக்கும் என்பதால் இரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நேற்று பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களையும்,வீடியோவையும் திரைப்படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்தப் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டுள்ளதாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை திரைப்படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.