Apple நிறுவனம் 2023-இல் Apple Watch Ultra 2-ஐ அறிமுகப்படுத்தியது.
Apple நிறுவனம் 2023-இல் Apple Watch Ultra 2-ஐ அறிமுகப்படுத்தியது. இப்பொழுது, 2025-இல் Apple Watch Ultra 3 வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் எதிர்பார்க்கப்படும் 3 புதிய வசதிகள் பற்றித் தெரிந்துகொள்வோம் :
1- உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறியும் வசதி (Blood Pressure monitor) : Apple பல ஆண்டுகளாக இரத்த அழுத்தக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது. இதனால் Ultra 3 Watchஇல் முதன்முறையாக Hypertensionஐ கண்டறியும் வசதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2- Satellite connectivity :
iPhone 14இல் அறிமுகமான Satellite Connectivity வசதி, முதன்முறையாக Apple Watch-இல் வர வாய்ப்புள்ளது. அவசரத் தேவைகளுக்கான குறுந்தகவல் வசதி Wi-Fi இல்லாத இடங்களில் பயனர்களுக்கு பாதுகாப்பான தொடர்பை வழங்கும்.
3- 5G வசதி (5G connectivity)
Apple இப்பொழுது 4G LTE வசதியைக் கொண்ட கடிகாரங்களை
மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் Ultra 3-இல் புதிய 5G RedCap Modem மூலம் 5G-ஐ கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.