பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, மாமன் திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், 'மாமன்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா லஷ்மி, ''நடிகர் சூரியுடன் நடித்தமை பெருமையாக உள்ளது. முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இப்பொழுது அவர் இருக்கிறார். அவருடைய வார்த்தையில் உண்மையும் மரியாதையும் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.