சருமத்திற்கான பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சியாகவும், கருமையாகவும் காணப்படும்.
அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் மூலிகைகளில் கற்றாழையும் ஒன்று.
கற்றாழை ஜெல்லை முகம், கழுத்து, கை, கால் பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவினால் சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
வெள்ளரிக்காய் சருமத்திற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள். வெள்ளரிக்காயின் சாற்றை முகம், கழுத்துப் பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் சருமம் இளமையாக இருக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு முகத்தில் தயிரைப் பூசி பத்து நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் குளித்தால் சருமம் மென்மையாகக் காணப்படும்.