‘மைனா' திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா போல் (Amala Paul). அந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இறுதியாக மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலா போல் (Amala Paul) தனது கணவர் தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுதியிருந்தார்.
அதில் அவர் "முதன் முதலில் நானும் என் கணவரும் கோவாவில் சந்தித்தோம். அவருக்கு தென்னிந்தியத் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் நான் ஒரு நடிகை என்பதே அவருக்குத் தெரியாது. நானும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பின்தான் அவருக்குத் தெரியவந்தது.
அவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்குச் சென்று விருது வாங்குவதையும், Red Carpet இல் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாகப் பார்த்தார்" என அமலா போல்(Amala Paul) கூறியுள்ளார்.