தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்கு 'கிங்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த இவரின் நேர்காணல் ஒன்றில் 'தனக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அழுத்தமான ஒரு கதையில் நடிக்க வேண்டும் எனவும் ஆனால் அவை எல்லாவற்றுக்கும் முதலில் தமிழ் மொழியை நன்கு படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் நெல்சனின் இயல்பும் அதிரடியும் எனக்கு பிடிக்கும். நடிகர் தனுஷின் இயக்கத்திலும் தனக்கு நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய விருப்பங்கள் நிறைவேறுமா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்