உலகின் முதல் Hydrogen-electric விமான சேவை விரைவில் பிரித்தானியாவின் East Midlands விமான நிலையத்தில் இருந்து ஆரம்பமாக உள்ளது.
இது எரிபொருள் இன்றி Hydrogen மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனுடன் இணைக்கப்பட்ட Electric மோட்டார்கள் மூலம் விமானத்தை இயக்குகிறது.
இதன் Byproduct வெறும் நீர் என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த நன்மை தரும் தொழில்நுட்பம் எனவும், குறித்த சேவையை விரைவில் வர்த்தக ரீதியில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பசுமை விமான சேவை உலகளவில் சரக்கு விமானங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் புதிய யுகத்துக்கு திறவுகோலாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.