தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால்.
அந்த வகையில், இவர் 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 'சண்டக்கோழி', 'திமிரு' ," தாமிரபரணி", "பூஜை" , மார்க் ஆண்டனி" என அடுத்தடுத்து வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் விஷால் நடிப்பில் கடைசியாக 'மதகஜராஜா' திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்பட்டதும் தன்னுடைய திருமணம் பற்றி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி, நடிகர் சங்கக் கட்டட நிர்மாணப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2025 ஓகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் " 29 ஆம் திகதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் திருமணம் பற்றி அறிவிப்பேன்.
என்னுடையது காதல் திருமணமாக இருக்கும் கடந்த சில மாதங்களாக அந்தக் காதல் சென்று கொண்டு இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.