பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ' Thug Life.
இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தை Madras Talkies, Red Giant Movies மற்றும் Raaj Kamal Films International நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா‘ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்த மாதம் இத்திரைப்படம் வெளியாகவிருப்பதால், இத்திரைப்படத்தின் Promotion பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Trailer இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இதனால், இரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.