இயக்குநர் அபிஷன் இயக்கத்தில் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் மே 1 ஆம் திகதி வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் " Tourist Family ".
இத்திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக திரைப்படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வெற்றி நடை போடும் " Tourist Family " திரைப்படம் அடுத்த கட்டமாக மே 24 ஆம் திகதி ஜப்பானில் வெளியாகவிருப்பதாக திரைப்படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாரயிறுதியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலும், இந்தத் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.