நடிகர் ரவி மோகன் சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்தபிறகு சர்ச்சை ஆரம்பமாகியது.
ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அவர் வேறொரு பெண்ணுடன் வந்தது பற்றி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதற்க்குப் பதிலாக ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்த்தியின் அம்மா சுஜாதா தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் ரவிமோகனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "கல்யாண வாழ்க்கையை மீட்க பலமுறை போராடினேன்.என்னால் வாழ முடியாத வாழ்க்கையில் இருந்து வெளிவந்துள்ளேன். எப்போது வீட்டை விட்டு வந்தேனோ அப்போதிலிருந்து கடைசி மூச்சு வரை ஆர்த்தி என் முன்னாள் மனைவி தான்" என்று தெரிவித்துள்ளார்.