இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி தொடங்கவுள்ளது.
2025-2027 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அந்த அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரரான ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக சுபோதீப் கோஷ் மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக டிராய் கூலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.