பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவரும் பெரும்பாலும் எதிர்கொள்ளும் பிரச்சினை முடி உதிர்தல். எனினும் தலைமுடி உதிர்விற்கான தீர்வினை வீட்டிலேயே இலகுவாகப் பெறலாம்.
தற்போது கோடை காலம் ஆரம்பமாகியுள்ளதால், அதிகமாக உடல் உஷ்ணம் மற்றும் வியர்வை வெளியேறும். இதன்போது அதிக அளவில் தலைமுடி உதிர்வதற்கான வாய்ப்புள்ளது.தலைமுடி உதிராமல் இருக்கவும் இளநரை பிரச்சினை வராமல் இருக்கவும் சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
பாசிப்பயிறு 500 கிராம்
செம்பருத்திப்பூ 10
செம்பருத்திப்பூ இலைகள் 20
வேப்ப இலைகள் இரண்டு கைப்பிடி
முதலில் பாசிப்பயறு, செம்பருத்தி இலைகள், செம்பருத்திப்பூக்கள், வேப்ப இலைகள் ஆகியவற்றை இரண்டு நாட்கள் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை தூளாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கால் லீட்டர் தண்ணீரில் 2 டீஸ்பூன் ஆளி விதைகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி கண்ணாடிப் போத்தலில் சேர்த்துக்கொள்ளவும்.
ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தூளுடன் 2 ஸ்பூன் ஆளி ஜெல், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் அல்லது சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து, தலைமுடியில் 10 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்வது போல தேய்த்து விட்டு, பின்பு shampoo எதுவும் பயன்படுத்தாமல் தலைமுடியை கழுவ வேண்டும்.
வாரம் இருமுறை இவ்வாறு செய்துவர தலைமுடி உதிர்விற்கான தீர்வினை பெறலாம்.