தேவையான பொருட்கள்
--------------------------------------------
Tin பால் - 510 கிராம்
சீனி - 250 கிராம்
தண்ணீர் - அரை கப்
பட்டர் - 1 மே.கரண்டி
வெனிலா - 1 தே.கரண்டி
முந்திரி (தேவையெனில்) - 50 கிராம்
செய்முறை
----------------------------
* Tin பால், சீனி, தண்ணீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான வெப்பத்தில் கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டிருக்கவும்.
* பின் கலவை கெட்டியானதும் வெனிலா, பட்டர் மற்றும் முந்திரியைச் சேர்த்து ஒட்டாமல் கிளறவும்.
* பின் பாத்திரத்திலிருந்து கலவையை வெளியே எடுத்து பட்டர் தடவிய தட்டில் ஊற்றவும்.
* கலவை நன்கு கெட்டியாகும் முன் துண்டுகளாக வெட்டி பரிமாறிக்கொள்ளவும்.