Google, Android மற்றும் Chromeக்காக புதிய AI மற்றும் அணுகல் தன்மை அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு, Google Gemini இல் திறன்களை Talk backற்கு கொண்டு வந்தது.
Talk back என்பது பார்வைத்திறன் அற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Android இன் Screen Reader கருவியாகும்.
உதாரணமாக, ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு படத்தை அனுப்பும்போது, Gemini மூலம் இயங்கும் Talkback படத்தின் விளக்கத்தை அளிக்கும்.
மேலும், அதன் தயாரிப்பு மற்றும் நிறம் போன்ற விடயங்களைப் பற்றிய தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், படத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் விளக்கம் தரும்.
அதேசமயம் , Expressive Captions என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இது ஒலி உள்ள எதற்கும் நிகழ்நேர வசனங்களை வழங்குகிறது.
AI மூலம் இயங்கும் இந்த செயற்பாடு கிட்டத்தட்ட எல்லா பயன்பாடுகளிலும் வேலை செய்யும்.
Google ஐ பொறுத்தவரை, PDF ஆவணத்தை Scan செய்வது இப்போது முன்பை விட எளிதாகிவிட்டது.
முன்பு, Screen Readers PDF கோப்புகளுடன் ஒத்துழைக்காது. ஆனால் இப்போது Google Chromecast Optical Character Recognition (OCR)ஐ பயன்படுத்தி கோப்பில் உள்ள உரையை Scan செய்கிறது.
மேலும், பயனர்கள் வலைப்பக்கத்தின் தோற்றத்தைப் பாதிக்காமல் கட்டுரையை பெரிதாக்க முடியும்.
ஒரு பக்கத்திற்கான அமைப்பை மாற்றலாம் அல்லது அனைத்து வலைத்தளங்களுக்கும் பொருந்தும்படியும் தேர்வு செய்யலாம்.