நடிகர் விஷால் சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவரான அனிஷா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருந்தார்.
விஷால் - அனிஷா இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்திற்கு சில மாதங்களே இருந்தபோது திடீரென அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஷால் ஒரு பேட்டியில், இன்னும் சில மாதங்களில் தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அது கண்டிப்பாக காதல் திருமணமாக இருக்கும் என்றும், நடிகர் சங்கத்தின் கட்டட நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பிறகுதான், தனது திருமணம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், ஆறு வருடங்கள் கழித்து நடிகர் விஷால் தன்னுடைய காதல் திருமணம் பற்றிய அறிவிப்பை தனது இரசிகர்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள "யோகிடா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றையதினம் சென்னையில் இடம்பெற்றது.
இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் நடிகர் விஷாலும், நடிகை தன்ஷிகாவும் “நாங்கள் இருவரும் August மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப் போகின்றோம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.