நீதிமன்றத்தில் முன்னிலையாகிய ரவி மோகன், ஆர்த்தி!
SooriyanFM Gossip - நீதிமன்றத்தில் முன்னிலையாகிய ரவி மோகன், ஆர்த்தி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பிரபல இந்தியத் திரைப்பட நடிகரான ரவிமோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகினர்.
இந்தநிலையில், ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் மாதாந்தம் இந்திய மதிப்பில் 40 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென்று ஆர்த்தி இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதன்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்குள் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டுமென்று நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருவரது மண வாழ்க்கை சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், இடைநடுவே இருவருக்குமிடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு September மாதம் 09ஆம் திகதி நடிகர் ரவி மோகன் விவாகரத்துக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.