விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படமான 'மகாராஜா' திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக 'ACE' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.
இதற்கு முன் ஆறுமுககுமார், விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படம் இம்மாதம் 23 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது.'ACE' திரைப்படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 36 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ACE' திரைப்படத்தின் 'Anthem' என்ற 2 ஆம் பாடலை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.