இணையத் தேடல் உலகில் Google மற்றும் Chromeஇன் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், இந்த ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று இணையவாசிகள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்.
Artificial Intelligence ஐ பயன்படுத்தி Googleக்கு நேரடிப் போட்டியாக "Comet " என்ற தேடுபொறியை விரைவில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த உலாவி, Googleக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். செயற்கை நுண்ணறிவின் ஆற்றலால் இயங்கும் "Comet ", ஆழமான தகவல்களைத் தேடித் தருவதுடன், பல தானியங்கி வேலைகளையும் செய்யக்கூடியது.
இதனால், இணைய உலாவலின் எதிர்காலம் முற்றிலுமாக மாற வாய்ப்புள்ளது. இது Google போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு புதிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.