முன்னாள் மனைவி உட்பட தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள 'Thug life’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். தனது மனைவி குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அவரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
பேட்டியில், ஒருவரிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினால் யாரிடம் கேட்பீர்கள் என ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், "எல்லோரிடமும் தான் கேட்க வேண்டும். குறிப்பாக எனது குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எனது மகன், மகள் மற்றும் எனது முன்னாள் மனைவி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனக் கூறினார்.