தமிழ்த் திரையுலகில் இப்பொழுது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவகாரமே பேசுபொருளாகியுள்ளது.
இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது கெனிஷாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,''என்னை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். நான் எங்கும் ஓடி விட மாட்டேன். எதையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கில்லை. என்மீது குற்றம் இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு அழையுங்கள். என்னிடம் எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன் '' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.