கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியாகிய 'கும்கி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இவர் தற்பொழுது அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் 'Love Marriage' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் திரைப்படத்தின் First Look Poster வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது.திரைப்படத்தின் முதல் பாடலான 'கல்யாண கலவரம்' என்ற பாடலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், "Love Marriage" திரைப்படத்தின் 'பேஜாரா ஆனேன்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் சிவாங்கி பாடியுள்ளார்.
திருமணம் தாமதமாகுவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தொடர்ந்து திரைப்படத்தின் Teaser மற்றும் Trailer உள்ளிட்ட புதிய ததககவல்களை விரைவில் வெளியிடவுள்ளதாக திரைப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.