பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகையான தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் நடிப்பில் வெளியாகிய 'பையா', "வீரம்" , "அயன்", "தில்லாலங்கடி", "சிறுத்தை", "அரண்மனை 4" ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக சம்பளம் பெற்று வருகிறார்.அதேநேரம் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கர்நாடக அரசின் சந்தன சவர்க்கார விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்த விளம்பரத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து சம்பளமாக இந்திய மதிப்பில் 6.2 கோடி ருபாய் வழங்கப்படவுள்ளது.