தனக்கென்று தனி இரசிகர்கள் பட்டாளத்தை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கக்கூடிய நடிகர்களுள் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார்.
சமீபகாலமாக நடிப்பில் மட்டுமல்லாமல் கார் பந்தயத்திலும் தனது அதீதமான ஈடுபாட்டைக் காட்டிவரும் அஜித்குமார், 'Ajith Racing' என்ற சொந்த அணியை உருவாக்கி பல கார் பந்தயப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்போது உத்தியோகபூர்வமாக 'Ajith Racing' என்ற பெயரில் சொந்தமாக Youtube Channel ஒன்றை அஜித்குமார் ஆரம்பித்திருக்கிறார்.
இந்த Channelஇல் தான் பங்குபற்றும் அத்தனை கார் பந்தயங்கள் குறித்த பதிவுகளும் ஒளிபரப்பாகும் என்று தனது X தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.
இந்த Channelஐ சில மணி நேரங்களில் 17,000இற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.