ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஜெயிலர்". இத்திரைப்படம் இந்திய மதிப்பில் 700கோடி ரூபாய் வரை வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், "ஜெயிலர்" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. இத்திரைப்படத்திற்கு மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
மார்ச் மாதம் முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திரைப்படக்குழு இதுவரையில் "ஜெயிலர் 2" திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆனால், தற்பொழுது "ஜெயிலர் 2" திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தை முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், சந்தானத்துடன் இயக்குநர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தால், சந்தானம் கண்டிப்பாக "ஜெயிலர் 2" திரைப்படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.