உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ''Thug Life'' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி உலகளவில் வெளியாகுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகர் சிம்பு ''Thug Life'' திரைப்படத்தைத் தொடர்ந்து "STR 49", ''STR 50'' மற்றும் ''STR 51'' ஆகிய திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூட் அந்தோனி ஜோசப்பின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும், இத்திரைப்படத்தில் Jackie Chan மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இத்திரைப்படம் Pan World திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தை ஆரம்பிக்க குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் செல்லுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 03 மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு, Japan நாட்டுக்கு சென்றிருந்த வேளையில் , Jackie Chan ஐ நேரில் சந்தித்துப் பேசியதாகவும், அப்பொழுதுதான் இந்தத் திரைப்படத்தில் Jackie Chan ஐ நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.