சசிக்குமார் - சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் 1ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிய திரைப்படம் "Tourist Family".
இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 80 கோடி ரூபாய் வரையில் வசூலித்து, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக அமைந்துள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பம், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்குச் சென்று, அங்கு அவர்கள் சந்திக்கும் சவால்களை நகைச்சுவையாக சித்தரித்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
மேலும், இத்திரைப்படம் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் "Tourist Family" திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.