இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
இவரது நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழில் 'விடாமுயற்சி', அண்மையில் 'Good Bad Ugly' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதனைத் தொடர்ந்து த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'Thug Life' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது. மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 திரைப்படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம், உங்களுக்கு எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த நடிகை த்ரிஷா, "சந்தேகமே வேண்டாம் பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை அவர் எந்த மாதிரியான கதைகளில் நடித்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார்" என்று தெரிவித்துள்ளார்.