மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'Thug Life'.
இம்மாதம் 5ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே Thug Life திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்த மழை' மற்றும் 'அஞ்சு வண்ணப் பூவே' ஆகிய பாடல்கள் தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக முத்த மழை பாடலை ஹிந்தி மற்றும் தெலுங்கில் chinmayi பாடியிருக்கிறார். தமிழில் Dhee இந்த பாடலைப் பாடியுள்ளார்.
Thug Life திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் chinmayi இந்தப் பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் chinmayi பாடிய பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Thug Life திரைப்படத்தில் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் chinmayi பாடியதைப் போன்று, தமிழிலும் chinmayiயைப் பாட வையுங்கள் என, திரைப்படக்குழுவிடம் பலர் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், நேர்காணலொன்றில் பங்கேற்ற chinmayi, ‘Thug Life இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை Dhee தான் பாடியிருப்பார். ஆனால், அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. Dhee க்கு தனித்துவமான குரல் வளம் உண்டு. தமிழில் முத்த மழை பாடலுக்கு அவரைப் பயன்படுத்தியதற்கு அப்பாடலுக்கு ஒரு வித்தியாசத்தைக் கொடுப்பதற்காகவும் இருக்கலாம்.
என்னுடைய 20ஆவது வயதில் முத்த மழையை இந்தளவிற்குப் பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் காரணம். இளம் திறமையாளரான Dhee இன்னும் 15 ஆண்டுகளில் 100 chinmayi, shreya ghoshalகளை விழுங்கலாம். எங்களுக்குள் எந்தப் போட்டிகளும் இல்லை. பாடகி Dheeயையும் என்னையும் ஒப்பிடக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்