தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. அவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம்தான் ‘Miss ஷெட்டி MR பொலிஷெட்டி’. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, நடிகை அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும் இத் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி 'காதி' திரைப்படம் ஜூலை 11ஆம் திகதி வெளியாகும் என்று திரைப்படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.