SooriyanFM Gossip - இன்று வெளியாகவுள்ள "பறந்து போ" திரைப்படத்தின் Teaser!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
121 Views
யதார்த்தமான திரைப்படங்களை இயக்கி இரசிகர்களின் மனதை வென்றவர் இயக்குநர் ராம் . "கற்றது தமிழ்", "தங்க மீன்கள்", "பேரன்பு", "தரமணி" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது "பறந்து போ" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவா கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் அன்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம் திகதி வெளியாகவுள்ளது.
பிடிவாத குணத்தைக் கொண்ட பாடசாலைக்குச் செல்லும் சிறுவனும், பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும், நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்துப் பேசும் வகையில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "Sun Flower" என்ற பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திரைப்படத்தின் Teaser இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.