Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
மனைவி குறித்து நெகிழ்ந்து பேசிய விராட் கோலி!

SooriyanFM Gossip - மனைவி குறித்து நெகிழ்ந்து பேசிய விராட் கோலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
நேற்று நடைபெற்ற IPL இறுதிப் போட்டியில் Royal Challengers Bengaluru அணி கிண்ணத்தை வென்று மகுடம் சூடியது. கடந்த 18 வருடங்களாக RCB அணிக்கு இருந்த கிண்ணத்தின் வேட்கை நேற்று தீர்ந்தது என்றே சொல்லலாம். Punjab Kings அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், Royal Challengers Bengaluru அணி 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. 

இந்த வெற்றியை அடுத்து விராட் கோலி ஆனந்தக் கண்ணீரை விட்டார். தனது மகிழ்ச்சியை சக அணி வீரர்களிடமும், மனைவி அனுஷ்கா ஷர்மாவிடமும் பகிர்ந்துகொண்ட அவர், RCB அணி இரசிகர்களின் கிண்ணக் கனவை 18ஆண்டுகள் அதே அணியில் இடம்பெற்று நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

இந்தப் போட்டியை அடுத்துப் பேசிய விராட் கோலி, “இந்த வெற்றி எந்தளவு RCB அணிக்குச் சொந்தமானதோ, அதேயளவு இரசிகர்களுக்கும் சொந்தமானது. நான் என்னுடைய இளமைக்காலம், அனுபவம் மற்றும் எனது உச்சத்தையும் இதில் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

தனது மனைவியான அனுஷ்கா ஷர்மா குறித்துப் பேசும்பொழுது, அனுஷ்கா ஷர்மா 2014ஆம் ஆண்டிலிருந்து RCB அணிக்கு நேரில் வந்து ஆதரவளித்து எங்களது தோல்வியிலும், உடனிருந்திருக்கிறார். அவரும் இதற்காக 11 ஆண்டுகள் காத்திருந்தார். உங்கள் துணை உங்களுக்காக செய்யும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று தனது மனைவி குறித்து பெருமையுடன் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top