பிரபல இயக்குநர் மணிரத்னதின் இயக்கத்தில் கமல், சிலம்பரசன் த்ரிஷா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “Thug life”.
திரைப்படத்தின் promotion நிகழ்வில் கன்னட மொழி, தமிழில் இருந்துதான் பிறந்தது என்று சொல்லியதற்காக, கன்னட அரசியல் அமைப்பினர் கமல்ஹாசனை புறக்கணித்து “Thug life” திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் கமல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் திரைப்படத்தின் கன்னட வெளியீட்டைத் தள்ளிவைப்பதாகவும் கமல் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் கர்நாடக Film Chamber, கர்நாடக அரசு மற்றும் கமல்ஹாசன் தரப்பு ஆகியன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
தமிழ் மக்கள் கமலுக்காக மொழி , சாதி, பேதமின்றி ஆதரவளித்து வருகின்றனர். மேலும் தற்பொழுது “Thug life” திரைப்படத்தினால் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜன நாயகன் திரைப்படத்தை தயாரிப்பது “K.V.N production” என்ற பெங்களுரை சேர்ந்த நிறுவனமாகும். கர்நாடகாவில் “Thug life” திரைப்படத்தை வெளியிடாவிட்டால். தமிழ் நாட்டில் ஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் அதே நிறுவனம் தயாரிக்கும் “Toxic” திரைப்படத்தில் யாஷ் நடிக்கிறார். அத்திரைப்படமும் ஒரு Pan இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. அந்த திரைப்படத்தையும் வெளியிட விடமாட்டோம் என அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஜன நாயகன் மற்றும் “Toxic” திரைப்படங்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.