பொதுவாக ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்வதால், அவர்களின் முதுமைப் பருவம் என்பது ஆரோக்கியமாக இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் நினைப்பதைப் போல் இது உண்மை இல்லை
பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் உடலில் இருக்கும் Estrogen அளவு குறைகின்றமை பொதுவானதாகும். இது பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு அதிக சோர்வு, மனநிலை மாற்றங்கள், எலும்பு ஆரோக்கியம் குறைவது மற்றும் மூட்டு விறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பெண்கள் முதுமையடைதலின் ஒருபகுதியாகக் குறிப்பிடப்படும் மேற்கண்ட மாற்றங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல, ஆனால் அவை பெண்களின் அன்றாட நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, போதுமான கல்சியம், விட்டமின் D சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.
அத்துடன் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம்.