Facebook, Google, Apple, Microsoft போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்களின் (Password) கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Facebook, Google,Apple, Microsoft மற்றும் Instagram உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தரவுகள் தொடர்பில் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தும்படி ஆராய்ச்சியாளர்கள் பயனர்களை பரிந்துரைக்கின்றனர்.
தொழில்நுட்ப நிறுவனங்களும், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சினை குறித்து தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.