Norway Classical Chess போட்டியில் நடப்பு உலக சம்பியனான தமிழக வீரர் குகேஷ் உள்ளிட்ட 6 வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தத் தொடரில், Carlsenஐ விட அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் Fabiano Caruanaவை எதிர்த்து விளையாடிய குகேஷ், போட்டியில் அவர் செய்த தவறால் தோல்வியைத் தழுவி, 3ஆவது இடத்தைப் பெற்றார்.
10ஆவது சுற்றுப் போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் Carlsen முதலிடத்தையும், Fabiano Caruana 15.5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும் பெற்றனர்.
இத்தொடரை வெற்றிகொண்டதன் மூலம் Magnus Carlsen 7ஆவது முறையாகவும் champion பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.