சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் T.ராஜேந்தர் இடையே பல ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்தும், இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட இதுவரை பணிபுரியவில்லை. ஆனால் தற்போது, ‘கூலி’ திரைப்படத்தில் T.ராஜேந்தர் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல், இரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் இதற்கான Promo Video
தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடலை T.ராஜேந்தர் பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ரஜினியின் திரைப்படத்தில் முதல் முறையாக T.ராஜேந்தர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.