'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து.
இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.
இவர் இசைஞானி இளையராஜாவுடனும் இசைப்புயல் A.R. ரஹ்மானுடனும் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், ''தான் எழுதிய பாடலின் பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம், திரைப்படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கின்றன. இது குறித்து தன்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. எனினும் சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் மீது கோபம் கொண்டதில்லை, காணும் இடங்களில் கேட்டதுமில்லை.
செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரீகம் ஆகாது. ஆனால், என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என்று தனது X தளப்பக்கத்தில் கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன்
பதிவிட்டுள்ளார்.