மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் சின்மயி குரலில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பலராலும் மறக்க முடியாது. அப்பாடல் சின்மயிக்கு பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்தது.
தனித்துவமான குரலால் தமிழ்த் திரையுலகில் பாடகியாகவும் கதாநாயகிகளுக்குக் குரல் கொடுக்கும் Dubbing கலைஞராகவும் இருந்த சின்மயி, கவிஞர் வைரமுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என தெரிவித்த விடயம் சர்ச்சையாகியது. இவர் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, சின்மயிக்கு பல சிக்கல்கள் எழுந்தன. மறைமுகமாக, அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.
இந்தநிலையில் சமீபத்தில் 'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய பாடல் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன் இவரது குரலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதேவேளை விஜய் ஆண்டனி ஒரு பேட்டியில் , “நான் விரையில் திரைப்படங்களில் இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக சின்மயியை பாட வைப்பேன்” என்று கூறியிருக்கிறார்.