அதிக வறட்சியுடனான காலநிலையின் போது பலருக்கு சருமத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.இத்தகைய சருமச் சுருக்கங்களை இயற்கையான முறையில் எவ்வாறு நீக்கலாம் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பால் பெரிதும் உதவுகிறது. ஓர் அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் பாலை சேர்க்கவும். அதனுடன் பாதாம் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை சருமத்தில் பூசி 15 - 20 நிமிடங்களின் பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவவும். இந்த செயல்முறையை தொடர்ந்து செய்துவர சருமத்திலுள்ள சுருக்கங்கள் மறையும்.
அன்னாசிப் பழத்தில் விட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. இது சருமப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கக்கூடியது. இதனை பயன்படுத்தும்போது சருமச் சுருக்கங்கள் விரைவாக நீங்கும். அன்னாசிப் பழத்தின் சாற்றை சருமத்தில் பூசி 20 நிமிடங்களின் பின்னர் கழுவினால் சருமம் இளமையாகக் காணப்படும்.
வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள், சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. வாழைப்பழத்தை சிறிது சிறிதாக வெட்டி அதனை பேஸ்ட் போல கலந்துகொள்ளவும். இந்தப் பேஸ்ட்டை சுருக்கம் உள்ள இடத்தில் தடவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு காய வைத்த பின் வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர சருமத்திலுள்ள சுருக்கங்கள் குறைவதை உணர முடியும்.