கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை ஷார்ஜா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எரிபொருட்களைவிட ஹைட்ரஜன், சிறந்த மாசு இல்லாத எரிபொருளாகக் கருதப்படுகிறது.
காரணம் மற்ற எரிபொருட்கள் போல கரியமில வாயுவை (கார்பன்-டை- ஒக்சைடை) வெளியிடாது. எனவே, ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிசக்திக்கான ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இரசாயனங்கள் அல்லது உப்பு அகற்றுதல் இல்லாமல் கடல் நீரில் இருந்து நேரடியாக ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
குறித்த தொழில்நுட்பத்தின் மூலம், கடல் நீரில் இருந்து 98% மின்சாரத்தைப் பயன்படுத்தி சுத்தமான ஹைட்ரஜனை உருவாக்க முடியும்.
இந்த முறையில் எந்த இரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதில்லை, எனவே இது முற்றிலும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மாசு இல்லாதது.
இந்தத் தொழில்நுட்பம் குறைந்தது 300 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும். எதிர்காலத்தில், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கடலோரப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் ஹைட்ரஜன் பண்ணைகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.