இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் 'த்ரிஷ்யம்'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் பாகம், உருவாகியுள்ளது.
இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.
மே மாதம் 21ஆம் திகதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாள் இந்திய மதிப்பில் 50.35 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் 58 மணி நேரத்தில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.