'King of Pop' என்று இரசிகர்களால் இன்று வரை அன்பாக அழைக்கப்படும் Pop இசை உலகின் முடி சூடா மன்னன் Michael Jackson இன் வாழ்க்கை வரலாறானது, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி 'Michael' என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியிருந்தது.
இயக்குநர் Antoine Fuqua இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் Michael Jackson கதாபாத்திரத்தில் அவரது அண்ணனின் மகனான Jaafar Jackson நடித்திருந்தார்.
வெளியான நாள் முதல் இன்று வரை வசூலில் மிரட்டி வரும் 'Michael' திரைப்படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
இதுவரை, உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 9,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாகத் திரைப்படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.