தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் தான் கார்த்திக் சுப்பராஜ். அண்மையில் இவரது இயக்கத்தில் உருவான டோரதி திரைப்படம் நல்ல பாராட்டினைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் டோரதி திரைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார். "டோரதி மிக மிக சிறப்பான திரைப்படம் திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தியுள்ளார். அதேவேளை டோரதி திரைப்படம் இந்தியப்பெறுமதிப்படி, 7 நாட்களில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.