உலகின் 2வது பணக்கார நடிகராக ‘King Khan’
என்று அழைக்கப்படும் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் கணிக்கப்பட்டுள்ளதாக ,சர்வதேச நிதியியல் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘The Financial Express’
எனப்படும் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த வரிசையில் ஹொலிவூட்டின் பிரபல நடிகர்களான டொம் குரூஸ்(Tom Cruise), ஜொனி டெப்(Johnny Depp) ஆகியோரையும் பின்தள்ளி ஷாருக்கான் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
ஷாருக்கானை முந்திய ஒரே ஒரு பொலிவூட் நடிகர் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்திருக்கும் ஜெர்ரி சைன்பெல்ட் ஆவார்.
ஜெர்ரி சைன்பெல்டின் மொத்த சொத்து பெறுதியாக 820 மில்லியன் டொலர்களைக் கொண்டிருக்கும் அதே வேளை ஷாருக்கானின் மொத்த சொத்து பெறுதியாக 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றது.
நடிகராக பொலிவூட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் Bollywood Badshah ஷாருக் திரைப்பட தயாரிப்பாளராகவும் IPL கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கட்டா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளராகவும் விளங்குகிறார்.
வரிசைப்படுத்தப்பட்டுள்ள நடிகர்களில் மிக வயது முதிர்ந்தவராக 84 வயதுடைய கிளின்ட் ஈஸ்ட்வூட்(Clint Eastwood) உள்ளார். இவர் உலக பணக்கார நடிகர்களில் 9வது இடத்திலுள்ளார்.