இணையவாசிகளின் விருப்பத்தெரிவான கூகிள் வித்தியாசங்களின் பிறப்பிடம்..
புதுமைகளை உருவாக்கி உலா வரவிடும் ஒரு மஜிக் நிறுவனம்.
உலகில் பல்வேறு பட்ட கார்களை தயாரிக்கின்ற நிறுவனங்கள் உள்ள நிலையில், கூகிள் நிறுவனமும் தனது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளது.
ஏனைய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான கார்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல், தனது வழமையான புதுமைப் படைப்புக்களின் பாணியிலேயே தனக்கென தனியான ஒரு பாணியில், தாமே சுயமாக பயணிக்கக்கூடிய வகையில் நவீன வகையிலான கார்களை உற்பத்தி செய்து சாதித்துள்ளது.
இந்த நவீனரக கார்களில் ஓட்டுனர் தேவையில்லை என்பதுவும்
இரண்டு வகையான ஆளிகளே (switches) காணப்படுகின்றமையுமே இதன் சிறப்பு அம்சமாக காணப்படுகிறது.
ஒன்று நகர்வதற்கும் மற்றொன்று நிறுத்துவதற்குமாக பயன்படுத்தப்படுகிறது.
அதேவேளை மற்றைய கார்களை போன்று சுக்கான் (steering) மற்றும் வேகக்கட்டுப்பாட்டு மிதிகள்(accelerators) இவற்றில் பயன்படுத்தப்படவில்லை என்பது முக்கியமான விடயம்.
சாதாரண கார்களைப் போல் மக்களின் பார்வைக்கு கவரத்தக்க வகையிலும், மிகவும் பாதுகாப்பான வகையில், தன்னியக்க முறையில் இயங்கும் தொழில்நுட்பத்தை விரும்பும் மக்களுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த காரில் இரண்டு பேர் மட்டும் பயணிக்க கூடிய வசதி உள்ளதோடு, மணித்தியாலத்துக்கு 40 கிலேமீற்றர் மட்டுப்படுத்தப்பட்ட வேகத்திலேயே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
இந்த கூகுள் கார் தயாரிப்பு திட்டம் பற்றி கலிபோர்னியா மாநாட்டில் அதன் இணை ஸ்தாபகர் சேர்கே பிரின் வெளியிடப்பட்டுள்ளார்.
அடுத்த இரு ஆண்டுகளில் முழு அளவில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரீட்சார்த்தமாக கூகிள் கார்கள் ஓடவிடப்படவுள்ளன.