இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும்
ஷ்ருதி ஹாசனும் காதலிக்கின்றார்கள்.
இது முன்னர் சில காலம் வதந்தியாக உலா வந்துகொண்டிருந்தாலும் உறுதிப்படவுமில்லை.
இருவரும் வாய் திறக்கவுமில்லை.
எனினும் ரெய்னா விளையாடும் போட்டிகள் குறிப்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் விளையாடும் போட்டிகளுக்கு ஸ்ருதி ஹாசன் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோனியின் மனைவி சாக்ஷி அருகே
ஷ்ருதி அமர்ந்திருந்து போட்டிகளைப் பார்ப்பார்.

ரெய்னாவுக்கு ஷ்ருதி வரும் போட்டிகள் ராசியாக அமைந்திருந்தனவாம்.
எனினும் இப்போது ஷ்ருதி பிஸியாக ஆகிவிட அவர் IPL போட்டிகளுக்கு வருவதில்லை.ஆனால் ரெய்னா கலக்குகிறார்.

ஆனாலும் சும்மா Dating மாதிரி இருந்து இப்போது சீரியசான காதலாக மாறியுள்ளது என்று இரு தரப்பும் சொல்லியிருக்கும் நிலையில் இனி உத்தியோகபூர்வமாக ரெய்னா - ஷ்ருதி இருவரும் அறிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
கமலுக்கு மருமகனாக ஒரு கிரிக்கெட் வீரர் வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைத் தான்.
இதற்கு முதல் ஷ்ருதி நடிகர் சித்தார்த்தையும் ரெய்னா இந்திய அமைச்சர் பிரபுல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேலையும் காதலித்து வந்திருந்தனர்.

இதோ பூர்ணாவைத் திருமணம் செய்யபோகிறார் என்றிருந்த நிலையில் திடீரென காற்று ஷ்ருதியின் பக்கம் வீசியுள்ளது.
இருவரும் பிசியாக இருக்கும் நிலையிலும் அடிக்கடி சந்தித்தே வருகிறார்களாம்.
இது பற்றி கமலின் கருத்து எப்படி என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் பல்வேறுபக்கமும் இருக்கிறது.
அதுசரி இன்று சென்னையின் முக்கியமான போட்டி பார்க்க
ஷ்ருதி வருவாரா?