அண்மைய நாட்களில் FACEBOOK ரசிகர் பக்கத்தில் பிரபல நடிகர் ஷாரூக்கானை பின்தள்ளிய சல்மான் கான் என்ற செய்திகள் உலா வந்தன.
இந்த நிலையில்
ஷாரூக்கான்,மற்றும் சல்மான்கான் ஆகியோரை பற்றிய ஒரு சுவாரஸ்ய கதையையும் பகிருகிறோம்.
அதாவது சர்வதேச அளவில் இணையத்தில் அதிகமான மக்களை ஈர்த்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் டைம் பத்திரிகை 100 பேர் அடங்கிய இப்பட்டியலை தயாரித்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம்பெற்றுள்ளார்.இப்பட்டியலில் சச்சின் 68-வது இடத்தில் உள்ளார்.
ஷாரூக்கான் 99-வது இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள் இவர்கள் மட்டும்தான்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் 98 வது இடத்தில் ஷாருக்கானுக்கு ஓரிடம் முன்னே உள்ளார். பாப் பாடகிகள் மடோனா, பியான்சே நோஸல் ஆகியோர் முறையே 3, 4-வது இடத்தில் உள்ளனர். அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 11-வது இடத்தையும், ரஷ்ய அதிபர் பலடிமிர் புட்டின் 27-வது இடத்தையும், செர்பிய டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 61-வது இடத்தையும், போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் 70-வது இடத்தையும், பிரபல கார் பந்தைய வீரர் மைக்கேல் ஷுமேக்கர் 77-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதேவேளை Instragram என்று சொல்லப்படும் புகைப்பட விரும்பிகளது விருப்புக்குரிய தளமான இந்த தளத்தில் இப்போது முன்னணி நடிகர் அமீர் கானும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.